ஃபானி புயல்: அனைவரின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் பிரார்த்திக்கிறேன் - பிரதமர் மோடி

ஃபானி புயல்: அனைவரின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் பிரார்த்திக்கிறேன் - பிரதமர் மோடி

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
Published on


வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி வட இந்தியா நோக்கி பயணித்து வரும் ஃபானி புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்று வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் பலத்த மழை பெய்யும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது, ஃபானி புயல் சின்னம் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், ஆயத்த ஏற்பாடுகள் செய்யவும் அறிவுறுத்தியுள்ளேன். 

அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் படையினரும் செயல்பட உத்தரவிட்டுள்ளேன். அனைவரின் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் பிரார்த்திக்கிறேன் என்று மோடி பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com