ஆதாரங்கள் திருடுபோய் விட்டது: அயோத்தி வழக்கில் ஹிந்து அமைப்பு தகவல்

வழக்கு தொடர்பான ஆதாரங்கள் திருடுபோய் விட்டது என்று அயோத்தி வழக்கு தொடர்பான  உச்ச நீதிமன்ற விசாரணையில் ஹிந்து அமைப்பு தெரிவித்த தகவலால் சலசலப்பு ஏற்பட்டது.
ஆதாரங்கள் திருடுபோய் விட்டது: அயோத்தி வழக்கில் ஹிந்து அமைப்பு தகவல்

புது தில்லி: வழக்கு தொடர்பான ஆதாரங்கள் திருடுபோய் விட்டது என்று அயோத்தி வழக்கு தொடர்பான  உச்ச நீதிமன்ற விசாரணையில் ஹிந்து அமைப்பு தெரிவித்த தகவலால் சலசலப்பு ஏற்பட்டது.

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்பினரும் உரிமை கோரி வந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலாகாபாத் உயர்நீதிமன்றம், அந்த இடத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-இல் உத்தரவிட்டது. அத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தினந்தோறும் அயோத்தி விவகாரம் குறித்து விசாரித்து தீர்ப்பளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி, செவ்வாய்க்கிழமை முதல் விசாரணை தொடங்கியது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரணையைத் தொடங்கியது. இந்த அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீர் ஆகியோர் உள்ளனர்.

இந்த அமர்வு முன் நிர்மோஹி அகாரா அமைப்பின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆஜரான மூத்த வழக்குரைஞர் சுஷீல் ஜெயின்  திடுகையில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப் பகுதியை நிர்வகிக்கும் உரிமையை நிர்மோஹி அகாரா அமைப்புக்குத் தர வேண்டும். நிர்மோஹி அகாரா பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும்  என்றார். சர்ச்சைக்குரிய பகுதியில் உள்புறத்தில் உள்ள சில இடங்களும், வெளிப்புறத்தில் சில இடங்களும் நிர்மோஹி அகாரா அமைப்புக்கு சொந்தமானதாக இருந்தன. இதனால், அந்தப் பகுதி சர்ச்சைக்குரியது அல்ல என்றார்.மேலும் அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் கடந்த 1934ஆம் ஆண்டு முதல் முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக முஸ்லிம் அமைப்புக்கு ஆதரவாக ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவனுக்கும், அரசியல் சாசன அமர்வுக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் வழக்கு தொடர்பான ஆதாரங்கள் திருடுபோய் விட்டது என்று அயோத்தி வழக்கு தொடர்பான  உச்ச நீதிமன்ற விசாரணையில் ஹிந்து அமைப்பு தெரிவித்த தகவலால் சலசலப்பு ஏற்பட்டது.

இரண்டாம் நாள் வாதம் இன்று தொடர்ந்தது. நிர்மோகி அகாரா அமைப்பு சார்பில் வைக்கப்பட்ட வாதங்களில், அது ராமர் பிறந்த இடம் என்பதற்கான சில ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள் வாய்மொழி ஆதாரங்கள் மட்டும் தான் இருக்கிறதா அல்லது வேறு ஏதேனும் பத்திரங்கள் போன்ற சான்றுகள் அல்லது வருவாய்துறை ஆதாரங்கள் உள்ளதா என கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த நிர்மோகி அகாரா தரப்பு, 1982-ம் ஆண்டு ஆதாரங்கள் திருடுபோய் விட்டதாக தெரிவித்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com