பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஜம்மு-காஷ்மீரை பார்வையிட விமானம் வேண்டாம், சுதந்திரம் வேண்டும்: ஆளுநர் அழைப்புக்கு ராகுல் பதில்

உண்மை நிலவரத்தை பார்வையிடுவதற்கு ஜம்மு-காஷ்மீருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வரலாம் என்று ஆளுநர் சத்ய பால் மாலிக் அழைப்பு விடுத்துள்ளார்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2019, 7:53 am

DIN

உண்மை நிலவரத்தை பார்வையிடுவதற்கு ஜம்மு-காஷ்மீருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வரலாம் என்று ஆளுநர் சத்ய பால் மாலிக் அழைப்பு விடுத்துள்ளார்.

தில்லியில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை இரவு பேட்டியளித்த ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீரில் வன்முறை நிலவுவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து ஜம்முவில் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் திங்கள்கிழமை செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்:

ஜம்மு-காஷ்மீரின் உண்மை நிலவரத்தை காண ராகுல் காந்தி வர வேண்டும் என அழைக்கிறேன். அவரை அழைத்து வருவதற்கு விமானத்தை அனுப்பத் தயாராக உள்ளேன். அதன்பிறகு உண்மை நிலவரத்தைப் பார்த்துவிட்டு, அவர் பேச வேண்டும் என்றார்.

இந்நிலையில் ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் சத்யபால் மாலிக் அழைப்புக்கு பதிலளித்துள்ளார். அதில்,

மதிப்புக்குரிய ஆளுநர் சத்யபால் மாலிக் அவர்களுக்கு, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை பார்வையிட வருமாறு நீங்கள் அழைப்பு விடுத்துள்ளதை மனதார ஏற்றுக்கொள்கிறேன். நானும், எதிர்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அப்பகுதிகளை பார்வையிட ஆவலாக உள்ளோம்.

அதற்காக நீங்கள் எனக்கு விமானம் எதுவும் தர வேண்டாம். மாறாக, அப்பகுதி முழுவதும் சென்று பார்வையிடவும், அங்கு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் மற்றும் மக்களை சந்தித்து பேசவும் முழு சுதந்திரம் வழங்கினால் போதுமானது என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.