
அடுத்த 25 ஆண்டுகளுக்கு பாஜகதான் ஆட்சியில் இருக்க வேண்டும் என மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.
கோவாவில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த், "அடுத்த 25 ஆண்டுகளுக்கு பாஜகதான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று இந்திய மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். வரும் நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அதன்பிறகு, பாஜகவை யாராலும் அகற்ற முடியாது" என்று தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் மேலும் பேசிய அவர், "இந்த ஆண்டு டிசமபர் மாதத்துக்குள் கட்சியின் அடுத்த மாநிலத் தலைவர் குறித்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.