
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் கோரும் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெறாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று காலை மறுத்துவிட்ட நிலையில், மதியம் 2 மணியளவில் மீண்டும் நீதிபதி ரமணா முன்னிலையில் முறையீடு செய்யப்பட்டது.
மேல்முறையீட்டு மனுவில் பிழைகள் இருப்பதால் அதனை சரி செய்து பிறகு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத்தில் பட்டியலிடப்படாத வழக்கை எவ்வாறு விசாரிக்க முடியும் என்றும் நீதிபதி ரமணா கேள்வி எழுப்பினார்.
அதோடு, ப. சிதம்பரத்தின் மனுவை இன்று அவசர வழக்காக விசாரிக்க மறுத்ததோடு, சிதம்பரத்தின் மனு மீது எவ்வித இடைக்கால நிவாரணம் வழங்கவும் நீதிபதி ரமணா மறுத்துவிட்டார்.
மறுபக்கம் சிதம்பரத்தைக் கைது செய்தே ஆக வேண்டும் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.