சுற்றுலா போக விருப்பமா? இதோ பிரதமர் மோடி ஒரு இடத்தைச் சொல்கிறார்.. சென்று பாருங்கள்!

ஏற்கனவே சுதந்திர தின உரையின் போது இந்தியர்கள் பல்வேறு சுற்றுலாத் தளங்களுக்கும் செல்லுங்கள், அப்போதுதான் சுற்றுலாத் துறை மேம்படும் என்று கூறியிருந்த பிரதமர் மோடி, தற்போது நாட்டு மக்களை, சர்தார் சரோவர் அணைக்குச் சென்று பாருங்கள் என்று கூறியுள்ளார்.
சுற்றுலா போக விருப்பமா? இதோ பிரதமர் மோடி ஒரு இடத்தைச் சொல்கிறார்.. சென்று பாருங்கள்!


புது தில்லி: ஏற்கனவே சுதந்திர தின உரையின் போது இந்தியர்கள் பல்வேறு சுற்றுலாத் தளங்களுக்கும் செல்லுங்கள், அப்போதுதான் சுற்றுலாத் துறை மேம்படும் என்று கூறியிருந்த பிரதமர் மோடி, தற்போது நாட்டு மக்களை, சர்தார் சரோவர் அணைக்குச் சென்று பாருங்கள் என்று கூறியுள்ளார்.

குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையில் இருந்து குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் நீர் ஆதாரத்தையும், மின்சாரத்தையும் பெற்று வருகின்றன.

1961ம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு இந்த அணைக்கான அடிக்கல்லை நாட்டினார் . நர்மதா நதி மீது சுமார் 30 அணைகள் கட்டப்பட்டது. அதில் சர்தார் சரோவர் அணைதான் மிகப்பெரிய அணையாக நிர்மாணிக்கப்பட்டது. இது உலகிலேயே மிகப் பெரிய அணை என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இந்த அணையின் உயரம் 535 அடியாகும். 

இந்த நிலையில், வடமாநிலங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக, இவ்வளவு பெரிய சர்தார் சரோவர் அணை நிரம்பியுள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 134 மீட்டரை எட்டியிருப்பது வரலாற்று நிகழ்வாகும்.

அணையின் புகைப்படங்களை மிக மகிழ்வோடு டிவிட்டரில் பகிர்ந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, சர்தார் சரோவர் அணையில் தண்ணீர் நிரம்பியிருக்கும் புகைப்படங்களை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மக்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளேன். இதனைப் பார்க்கும் போது நிச்சயம் மக்கள் இந்த அணைக்கு நேரில் சென்று பார்வையிடுவார்கள் என்றும் விரும்புகிறேன். இந்த அணைக்குச் சென்றால், அருகில் இருக்கும் ஒற்றுமைக்கான சிலையையும் சென்று பாருங்கள் என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com