

தெலங்கானாவில் கல்லூரி மாணவி ஒருவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கீர்த்தனா என்ற கல்லூரி மாணவி, சங்காரெட்டி மாவட்டம் ராமச்சந்திராபுரத்தில் வசித்து வருகிறார். இவர், வெளிமேலா பகுதியில் உள்ள நாராயண ஜூனியர் கல்லூரியில் இடைநிலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று கல்லூரியில் இருந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக, அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர்.
தீவிர சிகிச்சை அளித்த போதிலும், மாரடைப்பு காரணமாக மாணவி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 17 வயது மாணவி ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.