'ஒரு பக்கம் ராமர் கோவில் கட்டப்பட, மறுபக்கம் சீதா எரிக்கப்படுகிறார்' - உன்னாவ் சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்பு!

உன்னாவ் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் எரிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 
'ஒரு பக்கம் ராமர் கோவில் கட்டப்பட, மறுபக்கம் சீதா எரிக்கப்படுகிறார்' - உன்னாவ் சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்பு!

உன்னாவ் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் எரிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் ஓராண்டு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் மீது, ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள், பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தச் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண் உதவிக் கேட்டு கதறிய நிலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடியுள்ளார். மேலும், ஒருவரின் செல்போனை பிடிங்கி, காவல்துறையை உதவிக்கு அழைத்தார். இந்த தகவல்கள் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண், 90% தீக்காயத்துடன் கவலைக்கிடமான நிலையில், தில்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமை காங்கிரஸ் எம்.பிக்கள் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, 'உன்னாவ் சம்பவத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் எரிக்கப்பட்டுள்ளார். 95% அவருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? ஒருபக்கம் ராமர் கோவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது? மறுபக்கம் சீதா எரிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்.. குற்றவாளிகள் எப்படி சுதந்திரத்தை உணர்கிறார்கள்?' என்று கேள்வி எழுப்பினார். 

அதேபோன்று சிவசேனை கட்சி எம்.பி அரவிந்த் சாவந்த், 'பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும். தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் பல கீழ் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. அதுமட்டுமன்றி, கடைசியாகத்தான் உச்ச நீதிமன்றத்திற்கு வருகிறது. எனவே, பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் தீர்வு காண வேண்டும்' என்று தெரிவித்தார். 

மேலும், உன்னாவ் சம்பவம் குறித்து விவாதிக்க ஒரு குழுவை அமைக்குமாறும் அவர் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com