நிர்பயா வழக்கு: குற்றவாளிகளின் கருணை மனுவை நிராகரிக்க உள்துறை அமைச்சகம் பரிந்துரை

நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளி வினய் சர்மா அளித்துள்ள கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம், குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்துள்ளது.
நிர்பயா வழக்கு: குற்றவாளிகளின் கருணை மனுவை நிராகரிக்க உள்துறை அமைச்சகம் பரிந்துரை

நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளி வினய் சர்மா அளித்துள்ள கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம், குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்துள்ளது.

குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரிக்குமாறு தில்லி அரசு ஏற்கனவே பரிந்துரை செய்திருந்த நிலையில், அதனை அடிப்படையாக வைத்து, அதே பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு உள்துறை அமைச்சகமும் அனுப்பியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரை தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், போக்சோ சட்டத்தின் கீழ் தூக்கு தண்டனை பெறுவோர் கருணை மனு தாக்கல் செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2012-இல் தெற்கு தில்லியில் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி நிர்பயா கொடூரமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து, சிங்கப்பூர் மருத்துவமனை வரை சென்றும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், திகார் சிறையில் உள்ள நிர்பயா பாலியல் வழக்கின் குற்றவாளி வினய் சர்மா தனக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார். ஆனால், வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என தில்லி அரசு பரிந்துரைத்தது. 

இதுகுறித்து தில்லி உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், "வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்ற உறுதியான பரிந்துரையை தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலுக்கு அனுப்பியுள்ளோம்" என்றார்.

தில்லி அரசின் இந்த பரிந்துரை மீது துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் தனது கருத்தைப் பதிவு செய்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார்.

தில்லி அரசின் இந்த பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்து, அதன்பிறகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பார்வைக்கு இன்று அனுப்பியுள்ளது. இதையடுத்து, இதுதொடர்பான இறுதி முடிவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com