திருமண ஒப்பந்தம் முறிவு: உன்னாவ் வழக்கில் திடீர் திருப்பம்

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், பாலியல் பலாத்கார புகார் அளித்த பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
திருமண ஒப்பந்தம் முறிவு: உன்னாவ் வழக்கில் திடீர் திருப்பம்


உன்னாவ்: உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், பாலியல் பலாத்கார புகார் அளித்த பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, கொலையான பெண்ணுக்கும், குற்றம்சாட்டப்பட்ட ஷிவம் திரிவேதிக்கும் இடையே கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் திருமண ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அந்த ஒப்பந்தத்தில், ஜனவரி 15ம் தேதி 2018ம் ஆண்டு கோயிலில் இந்து முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக வாழ்வோம் என்று சுயநினைவோடு எழுதிக் கொடுக்கிறோம் என்று இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆனால், அப்பெண்ணின் ஜாதியைக் காரணம் காட்டி, ஷிவம் திரிவேதியின் குடும்பத்தார் இந்த திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால், திருமண ஒப்பந்தம் முறிக்கப்படுகிறது.

இதையடுத்து 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம், அப்பெண், ஷிவம் திரிவேதிக்கு எதிராக பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்கிறார். அப்போதில் இருந்தே, வழக்கைத் திரும்பப் பெறுமாறு, அப்பெண்ணுக்கு ஷிவம் திரிவேதி கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்குரைஞர் எஸ்.என். மௌரியா கூறுகிறார்.

இந்த நிலையில்தான் பெயிலில் வந்த ஷிவம் திரிவேதி, மேலும் நான்கு பேருடன் சேர்ந்து அப்பெண்ணைத் தாக்கி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்றார். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com