50 கிலோ வெங்காயத்தை கொள்ளையடித்த உ.பி.யைச் சேர்ந்த இருவர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் 50 கிலோ வெங்காயத்தை கொள்ளையடித்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
cum__dec___9___onion_0912chn_89_2
cum__dec___9___onion_0912chn_89_2
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் 50 கிலோ வெங்காயத்தை கொள்ளையடித்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வெங்காய உற்பத்தியில் முதல் இரண்டு இடங்களை வகிக்கும் மகாராஷ்டிரம், கா்நாடகத்தில் இந்த ஆண்டு கொட்டி தீா்த்த பருவமழையால் வெங்காய பயிா்கள் அழிந்தன. நாடு முழுவதும் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், சந்தைக்கு வரத்து குறைந்ததால் விலை கடுமையாக உயா்ந்தது.

இதனால், நாட்டின் பல நகரங்களிலும் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 120 ரூபாய் வரை விற்பனையானது. இதையடுத்து வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், வெங்காயத்தின் விலையைக் குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. 

இதற்கிடையே, நாடு முழுவதும் பல இடங்களில் வெங்காயம் பதுக்கி வைக்கப்படுவதும், வெங்காயம் திருடப்படும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் கோல்கர் என்ற பகுதியில் நின்று கொண்டிருந்த ரிக்ஷாவில் இருந்து 50 கிலோ வெங்காயம் திருடப்பட்டுள்ளது. ஹோட்டலுக்கு அனுப்பவிருந்த 50 கிலோ கணக்கிலான 6 சாக்குப்பைகள் இருந்த நிலையில், பைக்கில் வந்த நபர்கள், ஒரு சாக்குப்பையை( 50 கிலோ வெங்காயம்) திருடிச் சென்றுள்ளனர். தொடர்ந்து சம்மந்தப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளித்ததன் பேரில், போலீஸார் அவர்களை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து வெங்காயத்தையும் பறிமுதல் செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். 

வெங்காயத்தின் விலை உயர்ந்ததால் பெங்களூரு மற்றும் மகாராஷ்டிராவில் வெங்காயத்தை ஏற்றிச் செல்லும் லாரிகள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com