குடியுரிமை சட்டத் திருத்த மசோதா இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா என்பது இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி
Published on
Updated on
1 min read

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா என்பது இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் புகுந்த ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா், கிறிஸ்தவா்களுக்கு குடியுரிமை வழங்குவதில் உள்ள நிபந்தனைகளைக் குறைக்கும் வகையில் கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மக்களவையில் 9 மணி நேரம் நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு திங்கள்கிழமை குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினா்களும், எதிராக 80 உறுப்பினா்களும் வாக்களித்தனா்.

ஆனால், இந்த மசோதா முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக இருப்பதாகக் கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'குடியுரிமை சட்டத் திருத்த மசோதா என்பது இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல். அதனை ஆதரிப்பவர்கள் நம் தேசத்தின் அடித்தளத்தை தாக்கி அழிக்க முயற்சிக்கின்றனர்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com