உத்தரப் பிரதேசத்தில் நீதிமன்ற அறைக்குள் வைத்து குற்றவாளி கொல்லப்பட்டதன் எதிரொலியாக, 18 போலீஸாரை இடைநீக்கம் செய்து அம்மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஒரு கொலை வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, உள்ளே புகுந்த மூவர், நீதிமன்றத்தில் இருந்த துப்பாக்கிகளை எடுத்து குற்றவாளிகளை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தனர்.
இதில் குற்றவாளிகளில் ஒருவரான அன்சாரி சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொரு குற்றவாளி படுகாயம் அடைந்தார். பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்திய மூவரையும் போலீஸார் மடக்கிப்பிடித்தனர். அவர்கள் மூவருமே பழிவாங்கும் நோக்கில் குற்றவாளிகளை கொல்ல முயற்சித்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளி கொல்லப்பட்டதை அடுத்து, இந்த வழக்குடன் தொடர்புடைய 18 காவல்துறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்துள்ளதாக உத்தரப்பிரதேச காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!

வீட்டின் தரை மார்பிள் கல்லாக இருந்தால் தனிக்கவனம் அவசியம்!

ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


