சீராய்வு மனு தள்ளுபடி மகிழ்ச்சி அளிக்கிறது: நிர்பயாவின் தாய் பேட்டி

நிர்பயா பாலியல் வன்கொடுமை குற்றவாளியின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று நிர்பயாவின் தாயார் தெரிவித்துள்ளார்.
சீராய்வு மனு தள்ளுபடி மகிழ்ச்சி அளிக்கிறது: நிர்பயாவின் தாய் பேட்டி

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று நிர்பயாவின் தாயார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012-ல் தில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா கொடூரமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து, சிங்கப்பூர் மருத்துவமனை வரை சென்றும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

2012 நிர்பயா பாலியல் வன்கொடுமை- கொலை வழக்கின் குற்றவாளிகள் நால்வருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார் சிங், தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தார். 

இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.போபண்ணா அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், குற்றவாளி அக்ஷய் குமார் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து புதன்கிழமை உத்தரவிட்டது. இதன்மூலம் அவரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, நிர்பயாவின் தாயார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'குற்றவாளியின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.  இந்த வழக்கில் நீதிமன்றம் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளது' என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com