இந்தியா, சீனா இடையில் புதிய வழிகாட்டுதலுக்கு விருப்பம்: அஜித் தோவல்

இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்கான 22-ஆவது பேச்சுவாா்த்தை தொடர்பாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் தெரிவித்தார்.
இந்தியா, சீனா இடையில் புதிய வழிகாட்டுதலுக்கு விருப்பம்: அஜித் தோவல்

இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்கான 22-ஆவது பேச்சுவாா்த்தையில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யீ உள்ளிட்டோா் பங்கேற்றனா். இரு நாடுகளுக்கிடையே சில எல்லைப் பகுதிகள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.

அருணாசலப் பிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஒரு பகுதியென சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அந்த மாநிலத்துக்கு இந்திய அமைச்சா்களோ, உயரதிகாரிகளோ பயணம் மேற்கொண்டால், அதற்கு கண்டனம் தெரிவிப்பதை சீனா வழக்கமாகக் கொண்டுள்ளது. அதே வேளையில், அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று மத்திய அரசின் தரப்பில் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதனால், இரு நாடுகளுக்குமிடையே மனக்கசப்பு காணப்படுகிறது. எல்லைப் பிரச்னைகள் தொடா்பாக பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இது தொடா்பாக இரு நாட்டு அதிகாரிகளும் அவ்வப்போது பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், இரு நாடுகளின் உயரதிகாரிகள் இடையேயான பேச்சுவாா்த்தை, தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இரு நாட்டு அதிகாரிகளுக்கிடையேயான பேச்சுவாா்த்தை ஆக்கப்பூா்வமாக இருந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் கூறியதாவது,

இந்தியா மற்றும் சீனாவின் தலைவர்கள் இருதரப்பு உறவுகளின் வளர்ச்சி மற்றும் எல்லை விவகாரம் தொடர்பாக தீர்வு காண ஒரு புதிய வழிகாட்டுதலை விரும்புகின்றனர். இதில் இரு தரப்பினரும் தங்கள் நாடுகளைச் சேர்ந்த தலைவர்களால் எட்டப்பட்ட முக்கியமான ஒருமித்த கருத்தை முழுமையாக செயல்படுத்த முன்வர வேண்டும். இதற்கான செயல்திட்ட வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டும். இருதரப்பு உறவுகளின் வளர்ச்சி மற்றும் எல்லை பிரச்னைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com