
உத்தரப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வெண்கலச் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் திருவுருவச்சிலை உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலகமான லோக் பவன் நுழைவாயிலில் நிறுவப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரபல சிற்பி ராஜ் குமார் பண்டிட் என்பவரால் ரூ.89.6 லட்ச மதிப்பில் இந்தச் சிலை செதுக்கப்பட்டுள்ளது. வாஜ்பாயின் இந்தச் சிலை அவரது பிறந்த தினமான டிசம்பர் 25ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலை நிறுவப்பட்டிருப்பதன் மூலமாக மாநிலத்தின் மிக உயரமான சிலை இதுவென்ற பெருமையைப் பெருகிறது.