
ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்திற்கேற்ப பாரத ஸ்டேட் வங்கி தனது ரெப்போ விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது.
குறுகிய கால அடிப்படையில் வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அவ்வப்போது குறைத்து வருகிறது.
இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி தனது ரெப்போ விகிதம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே இருந்த 8.05 சதவிகிதத்தில் இருந்து 0.25% குறைத்து 7.8 சதவிகிதமாக அறிவித்துள்ளது. மேலும், இது ஜனவரி 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாரத ஸ்டேட் வங்கியில் வீட்டுக்கடன் மற்றும் சிறு, குறு தொழில்களுக்கான கடன்களின் வட்டி விகிதம் வருகிற ஜனவரி 1ம் தேதியில் இருந்து குறையும். இதனால் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.