மக்களிடம் மன்னிப்புக் கோரினார் பிரதமர் மோடி: எதற்கு தெரியுமா..?
மேற்கு வங்க மநிலம் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் இன்று நடைபெற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.


துர்காபூர்: மேற்கு வங்க மநிலம் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் இன்று நடைபெற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
தாகுர்நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்த போது மக்கள் கூட்டத்தில் திடீரென ஒரு கூட்ட நெரிசல் ஏற்பட்டு, ஒருவர் மீது ஒருவர் விழும் நிலை உண்டானது. இதனால் அங்கிருந்த சில பெண்களும் குழந்தைகளும் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
கூட்டம் தொடங்கியதும், பின்னால் இருந்த பாஜக தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு முன்னால் வர முயன்ற போது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.
பலரும் தடுப்புகளைத் தாண்டி குதித்து மைதானத்துக்குள் வர முயன்ற போது, இந்த மைதானம் மிகச் சிறியது. நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ, அங்கேயே இருங்கள். இந்த மைதானத்துக்குள் இடமில்லை, தயவு செய்து உள்ளே வர முயலாதீர்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், நிலைமை விபரீதமாவதை உணர்ந்த மோடி, தனது பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு பாரத மாதா கி ஜெய் என்று சொல்லிவிட்டு மேடையில் இருந்து இறங்கிச் சென்றுவிட்டார்.
பிறகு துர்காபூரில் நடைபெற்ற கூட்டத்தில், இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த மோடி, அந்த மைதானத்துக்குள் இருக்க வேண்டியதை விட இரு மடங்கு கூட்டம் கூடிவிட்டது. நீங்கள் காட்டிய அன்புக்கு மிகுந்த நன்றி. உங்களது அன்புக்கு நான் தலை வணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சில சகோதரிகளும், குழந்தைகளும் மயங்கி விழும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறன்.
இந்த மைதானத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். இது மிகவும் பெரியது. ஆனால், கூட்டத்தோடு ஒப்பிடுகையில் இது சிறியதாக உள்ளது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...