உங்கள் தொகுதியில் உங்களால் வெற்றி பெற முடியுமா? மேற்கு வங்கம் குறித்து பிறகு யோசிக்கலாம்: மோடிக்கு மம்தா பதிலடி
பிரதமர் மோடியால் வாராணசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறமுடியுமா? என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிலடி தந்துள்ளார்.


பிரதமர் மோடியால் வாராணசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறமுடியுமா? என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிலடி தந்துள்ளார்.
பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் மேற்கு வங்கத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற வெவ்வேறு கூட்டத்தில் பங்கேற்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை தாக்கி பேசினர். இந்நிலையில், அடுத்த சற்று நேரத்தில், இதற்கு பதிலடி தரும் வகையில் மம்தா பானர்ஜி கூறியதாவது,
"அவர்களுக்கு (பாஜக) மேற்கு வங்கத்தில் தலைவர்கள் கிடையாது. மாநிலத்தின் கலாச்சாரம் குறித்து எந்த ஒரு சிந்தனையும் இல்லாத வெளிநபரை அவர்கள் களத்தில் இறக்குகின்றனர். அவர்கள் தேர்தலுக்கு முன் வருவார்கள், அதன் பிறகு திரும்பி சென்றுவிடுவார்கள். அவர்களுக்கு மேற்கு வங்க மக்களுடன் எந்த தொடர்பும் இல்லை. மேற்கு வங்கம் குறித்து சிந்திப்பதற்கு முன்பாக அவர்கள் தங்களது மாநிலத்தில் பணியை செய்யட்டும்.
நரேந்திர மோடியை புதுதில்லியை பார்த்துக்கொள்ள சொல்லுங்கள். வாராணசி தொகுதியில் போட்டியிட்டு மோடியால் வெற்றி பெறமுடியுமா? அவருடைய சீட்டை குறித்து அவர் சிந்திக்க வேண்டும். யோகி ஆதித்யநாத்தை அவருடைய (உத்தரப் பிரதேசம்) மாநிலத்தை கவனித்துக்கொள்ள சொல்லுங்கள்.
அவர்கள் (வெளியில் இருந்து வரும் தலைவர்கள்) மேற்கு வங்கம் குறித்து சிந்திக்க வேண்டாம். அவர்கள் மாநிலத்தை கவனிக்கட்டும். மேற்கு வங்கத்தால் தன்னை பார்த்துக்கொள்ள முடியும். அதற்கு வெளிநபர்கள் யாரும் தேவையில்லை" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...