அடுத்த 5 ஆண்டுகளில் இந்த தேசத்தை முழுமையாக மீட்டுவிடுவோம்: எதைச் சொல்கிறார் பிரதமர்? 

அடுத்த 5 ஆண்டுகளில் இந்த தேசத்தை குறிப்பிட்ட ஓர் கலாச்சாரத்தில் இருந்து முழுமையாக மீட்டுவிடுவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் இந்த தேசத்தை முழுமையாக மீட்டுவிடுவோம்: எதைச் சொல்கிறார் பிரதமர்? 

லடாக் அடுத்த 5 ஆண்டுகளில் இந்த தேசத்தை குறிப்பிட்ட ஓர் கலாச்சாரத்தில் இருந்து முழுமையாக மீட்டுவிடுவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு ஞாயிறன்று பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.அங்கு ரூ.3,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கிறார்.

தனது பயணத்திட்டத்தில் முதலில் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியைப் பார்வையிடும் பிரதமர் மோடி, அவந்திபுரா பகுதியில் உள்ள விஜயாபூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் ஜம்மு நகரில் ஐஐஎம்சி கல்வி நிறுவனம் தொடங்குவதற்கான அடிக்கல்லையும், லடாக் பகுதியில் முதல் பல்கலைக்கழகம் அமைப்பதற்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

தொடர்ச்சியாக லடாக் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். அந்த மேடையிலேயே பாஜக தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கினார். லடாக் நகரின் பாரம்பரிய உடைகள் மற்றும் தலையில் குல்லா அணிந்தவாறு மேடையில் பிரதமர் மோடி பேசியதாவது:

துணிச்சலான, வீரம் நிறைந்த மக்களைக் கொண்டது லடாக் மண். கடந்த 1962 ஆண்டு நடந்தஹ் போராகட்டும், கார்கில் யுத்தமாகட்டும், வீரமுள்ள லடாக் மக்கள் நாட்டின் இறையான்மைக்காகவும், ஒற்றுமைக்காக்கவும் பாடுபட்டுள்ளனர். உங்களின் குளிர்ச்சியான வரவேற்பால் எனக்குக் குளிர் அடிப்பது தெரிகிறது.

லே பகுதிக்கு கடந்த ஆண்டு 3 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளனர். வரும் ஆண்டுகளில் இங்குச் சுற்றுலாத்துறை மிகப்பெரிய வளர்ச்சியை சந்திக்கவுள்ளது. இங்குள்ள மக்களின் நீண்டகால கோரிக்கையான பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்பதை நிறைவேற்றியுள்ளோம்.

எங்கள் ஆட்சியில் காலதாமதம் என்கிற கலாச்சாரம் இல்லை. காலதாமதம் என்ற ஒரு கலாச்சாரத்தில் இருந்து இந்த தேசம் ஒதுங்கி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தத் தேசத்தை முழுமையாக அந்த கலாச்சாரத்தில் இருந்து மீட்டுவிடுவோம். எந்த திட்டம் தொடங்கினாலும், அதைச் சிறப்பாக, விரைவாக, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிப்போம்.

லடாக் சுயாட்சி மலைமேம்பாட்டு கவுன்சிலானது இங்குள்ள மக்களுக்கு அதிகமான உரிமைகளை அளித்துள்ள அதேசமயம், மக்களின் மேம்பாட்டுக்காக அதிக நிதியையும்  ஒதுக்கியுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக ஸ்ரீநகர் முழுவதும் இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com