ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பகுதியில் குவிக்கப்பட்ட ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பகுதியில் குவிக்கப்பட்ட ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர்.

புல்வாமா தாக்குதல்: மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையின் அவசரக் கூட்டம் 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நேற்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 43 பாதுகாப்புப் படையினர் வீர மரணம் அடைந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
Published on


புது தில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நேற்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 43 பாதுகாப்புப் படையினர் வீர மரணம் அடைந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்பு நிலை குறித்தும், பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் குறித்தும் பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிபொருள் நிரப்பிய காரை மோதச் செய்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 43 வீரர்கள் பலியாகினர்.

இந்திய பாதுகாப்புப் படையினருக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப் பயங்கரத் தாக்குதலாக இது கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com