மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கருப்பு ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் 

ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கருப்பு ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். 
மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கருப்பு ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் 

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கருப்பு ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். 

ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் வரும் 5-ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்பங்கேற்பவர்கள் கருப்பு நிற ஆடைகள், ஸ்வெட்டர்கள், பிளேசர்கள், கைப்பைகள், ஷூக்கள் மற்றும் காலுறைகள் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துணை நிலை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெறும் அரங்கில் அரங்கில் நுழைந்து, பிரதமருக்கு கருப்புக கொடி காட்டுவதை தடுக்கவே, இத்தகைய உத்தரவை பலமு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிறப்பித்ததாகக் கூறப்பட்டது. 

முன்னதாக கடந்த வருடம் நவம்பர் 15-ஆம் தேதி இதேபோல் ஒரு கூட்டம் ராஞ்சியில் நடந்த போது, அப்போது கூட்ட அரங்கில் நுழைந்த துணை நிலை ஆசிரியர்கள் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டிய சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.   

இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கருப்பு ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். 

புதன்கிழமை இரவு நடைபெற துணை நிலை ஆசிரியர்கள் சங்க மாநில குழு கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்ட அரங்கில் போராட்டம் செய்வதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் இந்திரஜித் மஹ்தா தெரிவித்துள்ளார்.    

அதேநேரம் டிரான்சிஸ்டர், கேமரா, பைனாகுலர், தீப்பெட்டி மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்வதற்கான தடை நீடிக்கிறது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com