பணி நியமனங்கள், பதவி உயர்வு ஆகியவற்றில் விதிமுறைகளை மீறி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஏர் இந்தியா நிறுவன முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அர்விந்த் ஜாதவ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து, சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்(மருத்துவ வசதிகள்) பதவி காலியானதைத் தொடர்ந்து, அப்போதைய பொது மேலாளர் எல்.பி. நக்வா அப்பதவிக்கு ஆகஸ்டு 31, 2009 வரை தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். ஆனால், அதற்குப் பிறகும் அவர் நிர்வாக இயக்குநர் பதவியிலேயே தொடர்ந்துள்ளார். இது விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் உத்தரவை மீறிய செயலாகும்.
மேலும், நக்வா அப்பதவியில் தொடர்வதற்கு முறையான விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், அர்விந்த் ஜாதவ் கடந்த 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி அனுமதி வழங்கியுள்ளார். ஆனால், நக்வா மீண்டும் பொது மேலாளர் பதவிக்குத் திரும்ப வேண்டும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டது.
முன்னதாக, நிறுவனத்தின் பொது மேலாளர்(செயல்பாடு) பொறுப்புக்குத் தகுதியான ஆட்களைத் தேர்வு செய்வது தொடர்பாக அந்நிறுவனத்தின் முதன்மை அலுவலர் கஸ்தாவ் பால்தெளஃப், நிர்வாக இயக்குநர்(செயல்பாடு) ஏ.எஸ்.சோமன், எல்.பி. நக்வா ஆகியோர் அடங்கிய குழுவைக் கடந்த 2010-ஆம் ஆண்டு அர்விந்த் ஜாதவ் நியமித்தார்.
நக்வாவின் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சக விதிமுறைகளின்படி தேர்வுக் குழுவில் அவரால் இடம்பெற முடியாது. அவருக்குப் பதிலாகப் புதிய உறுப்பினர், தேர்வுக் குழுவில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல், நக்வா தேர்வுக் குழுவில் தொடர்ந்து இடம்பெற அர்விந்த் ஜாதவ் அனுமதித்துள்ளார். அமைச்சக விதிமுறைகளை மீறி அவர் செயல்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து ஜாதவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பொது மேலாளர்(செயல்பாடு) பதவிக்குத் தேர்வுக் குழு பரிந்துரைத்த 5 நபர்களில் ஒருவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு, விசாரிக்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்படும்.
இந்த ஊழல் முறைகேடு தொடர்பாக நக்வா, முன்னாள் பொது மேலாளர்(செயல்பாடு) ஏ.கத்பாலியா உள்ளிட்ட பலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு பிரச்னை... அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக! - கம்யூனிஸ்ட் வேண்டுகோள்
இந்தியாவின் மின்னல் வேக மனிதர்! தேசிய சாதனையை முறியடித்த குரிந்தர்வீர் சிங்!

வீர வசனங்கள் பேசிய முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பது ஏன்? - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

காத்திருந்து சிறுவனை கொலை செய்தது ஏன்? - விளக்குத்தூண் காவல்துறை விசாரணை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


