நாடே நம்மை கவனித்து கொண்டுள்ளது: நாடாளுமன்ற  பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து பிரதமர் மோடி 

நாடே நம்மை கவனித்து கொண்டுள்ளது என்று நாடாளுமன்ற  பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடே நம்மை கவனித்து கொண்டுள்ளது: நாடாளுமன்ற  பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து பிரதமர் மோடி 

புது தில்லி: நாடே நம்மை கவனித்து கொண்டுள்ளது என்று நாடாளுமன்ற  பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நடப்பு நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத் தொடர் வியாழன் அன்று துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த்   உரையாற்றினார்.    

வரும் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட்டை  நிதியமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளியன்று தாக்கல் செய்ய உள்ளார். தேர்தல் சமயம் என்பதால் இந்த பட்ஜெட்டில், பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், மத்திய அரசுக்கு எதிராக முக்கிய பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்துள்ளன. 

இந்நிலையில் நாடே நம்மை கவனித்து கொண்டுள்ளது என்று நாடாளுமன்ற  பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்  கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடி நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் முழுமையான அளவில் ஒத்துழைக்க வேண்டும். நாடே நம்மை கவனித்து கொண்டுதான் உள்ளது. எம்.பி.க்கள்  நாட்டின் வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமான முறையில் விவாதங்கள் நடத்த வேண்டும். அனைத்து முக்கியமான விஷயங்களிலும் விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com