பிகாரில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் பலி; 9 பேர் படுகாயம்

பிகார் மாநிலம் தனாபூரில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். 9 பேர் காயமடைந்துள்ளனர்.
பிகாரில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் பலி; 9 பேர் படுகாயம்
Updated on
1 min read


பாட்னா: பிகார் மாநிலம் தனாபூரில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். 9 பேர் காயமடைந்துள்ளனர்.

பிகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையில் மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகின. இங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி உள்ளது. 

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில அரசின் மீட்புக்குழுவினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில்,  நவாடாவில் உள்ள தனாபூரில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.  காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com