ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

முன்னாள் முதல்வரின் அண்ணா உணவகம் ஆகஸ்ட் 1 முதல் மூடப்படுகிறதா?

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தி வருவதோடு, பழைய திட்டங்களுக்கு பூட்டுப்போட்டு வருகிறது.

News image
Updated On :30 ஜூலை 2019, 6:12 am


விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தி வருவதோடு, பழைய திட்டங்களுக்கு பூட்டுப்போட்டு வருகிறது.

அதன்படி, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கொண்டு வந்த அண்ணா உணவகம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் மூடப்படுகிறது.

அண்ணா உணவகத்தில் ஏழை மக்களுக்காக ரூ.5ல் உணவு பரிமாறப்பட்டு வந்தது. இது குறித்து அண்ணா உணவகத்தை நடத்தி வந்த ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை நிர்வாகம், அண்ணா உணவகத்தில் ஜூலை 31ம் தேதி கடைசி உணவை வழங்கிவிட்டு மூடப்படுகிறது என்று அறிவித்துள்ளது.

இதன் மூலம் அண்ணா உணவகத்தில் பணியாற்றி வந்த எண்ணற்ற பெண் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயமும், ஏழை மக்களின் அன்றாட உணவும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அண்ணா உணவகம் மூடப்படுவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை என்றாலும் தற்காலிகமாக இந்த உணவகம் மூடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.