கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் முதல் அதிரடி: திப்பு சுல்தானுக்கு 'தடா'! 

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகு கர்நாடக முதல்வர் எடியூரப்பா, அங்கு கொண்டாடப்படும் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவுக்கு தடை விதித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் முதல் அதிரடி: திப்பு சுல்தானுக்கு 'தடா'! 

பெங்களூரு: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகு கர்நாடக முதல்வர் எடியூரப்பா, அங்கு கொண்டாடப்படும் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவுக்கு தடை விதித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரரும், மைசூர் மாகாணத்தை ஆண்ட இஸ்லாமிய மன்னருமான திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழா, கடந்த 2016-ம் ஆண்டு முதல் கர்நாடக மாநில அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்நிய படையெடுப்பின் மூலம்  வேற்று நாட்டு மன்னர்களின் வசமிருந்த கர்நாடக பகுதிகளை திப்பு சுல்தான் கைப்பற்றி, மைசூரு உள்ளிட்ட பல பகுதிகளை ஆட்சி செய்ததை நினைவுகூறும் வகையில்தான் சுதந்திரத்திற்கு பின்பும் கர்நாடகாவில் திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வந்தது.

இந்நிலையில்  நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகு கர்நாடக முதல்வர் எடியூரப்பா, அங்கு கொண்டாடப்படும் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவுக்கு தடை விதித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியான உத்தரவில் கர்நாடகாவில் கன்னட மொழி மற்றும் கலாச்சார துறை சார்பில் இனி  திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com