விவசாயிகளுக்கு இலவச பயிர் காப்பீட்டுத் திட்டம்: அறிவித்தது மேற்கு வங்க அரசு 

மேற்கு வங்க மாநில விவசாயிகளுக்கு இலவச பயிர் காப்பீட்டுத் திட்டம் ஒன்றினை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு இலவச பயிர் காப்பீட்டுத் திட்டம்: அறிவித்தது மேற்கு வங்க அரசு 

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில விவசாயிகளுக்கு இலவச பயிர் காப்பீட்டுத் திட்டம் ஒன்றினை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மேற்கு வங்க மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

மேற்கு வங்க மாநில அரசானது அக்ரிகல்ச்சுரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்னும் நிறுவனத்துடன் இணைந்து இந்த பயிர் காப்பீட்டுத் திட்டத்தினை வழங்குகிறது.

இவ்வாண்டு 'காரிஃப்' பருவத்தினை எதிர்கொள்ளக்கூடிய விவசாயிகளை இயற்கை சீரழிவுகளில் இருந்து பாதுகாக்கவும் ,  நிலையற்ற சந்தை மதிப்பு அபாயத்தில் இருபித்து காப்பாற்றவும் இந்த் காப்பீட்டுத் திட்டமானது உதவும்.

இந்த திட்டத்திற்கான ப்ரீமியத்தினை அரசே செலுத்தி விடுவதால் இது முழுக்க இலவசமான ஒரு திட்டமாகும். அத்துடன் இந்த திட்டத்தில் அமன் மற்றும் அஸ் வகை நெல் வகைகள், சணல் மற்றும் சோளம் ஆகிய பயிர் வகைகளுக்கு இது பொருந்தும்.

"பங்ளா சஸ்யா நிவாஸ்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டமானது டார்ஜிலிங், கலிம்போங், கிழக்கு மற்றும் மேற்கு பர்த்வான், கிழக்கு மற்றும் மேற்கு மிதினிபூர், மலடா, ஹூக்ளி, நாடியா, முர்ஷிதாபாத், கூச் பெஹார், பிர்பம், புருலியா, தெற்கு தினாஜ்புர் மற்றும் வடக்கு மற்றும் தெற்கு 24 பார்கனாஸ் ஆகிய மாவட்ட விவசாயிகளுக்கு பொருந்தும்.

இந்த திட்டத்தின்படி பயிரிடுதல், வளர்ப்பு மற்றும் அறுவடைக்குப் பிறகான காலகட்டம் வரையிலான இழப்புகளுக்கு விவசாயிகள் உரிய முறையில் நிவாரணம் பெறலாம்.

இவ்வாறு அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com