தேர்தல் ஸ்பெஷல்: அதிக வாக்கு வித்தியாசம்.. தேர்தல் வெற்றியாளர்கள் என்றால் நிச்சயம் இவர்கள்தாம்பா! 

வாழ்க்கையில் மட்டுமல்ல.. தேர்தலிலும் வெற்றி தோல்வி எல்லாம் சகஜம்தான். முக்கியக் கட்சிகளின் பிரபலமான வேட்பாளர்கள் ஒரே தொகுதியில் போட்டியிடும் போது அங்கு இன்னும் பரபரப்புத் தொற்றிக் கொள்வது வழக்கம்தான்.
தேர்தல் ஸ்பெஷல்: அதிக வாக்கு வித்தியாசம்.. தேர்தல் வெற்றியாளர்கள் என்றால் நிச்சயம் இவர்கள்தாம்பா! 

வாழ்க்கையில் மட்டுமல்ல.. தேர்தலிலும் வெற்றி தோல்வி எல்லாம் சகஜம்தான். முக்கியக் கட்சிகளின் பிரபலமான வேட்பாளர்கள் ஒரே தொகுதியில் போட்டியிடும் போது அங்கு இன்னும் பரபரப்புத் தொற்றிக் கொள்வது வழக்கம்தான்.

ஒரு கட்சியின் வேட்பாளரின் பலம் அறிந்தே, எதிர்க்கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அங்கே நிறுத்துவார்கள். அப்படி இருக்கும் போது எதிர் எதிர் கட்சி வேட்பாளர்களின் தீவிர பிரசாரம், அவர்கள் தொகுதிக்கு எந்த அளவுக்கு பரிச்சயமானவர்கள், அந்த கட்சி சார்பில் தொகுதிக்கு என்னவெல்லாம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு மக்கள் வாக்களிக்கிறார்கள்.

தமிழகத்திலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, பெரும்பாலானோர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்து விட்டனர். இதில், போட்டியிடும் வேட்பாளர்களின் பிரபலத்தால் சில தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்தைப் பெறுகின்றன.

எல்லாவிதமான போட்டிகளையும் சமாளித்து வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குள் அல்லது சட்டமன்றத்துக்குள் நுழைபவரே வெற்றியாளராகிறார். 

குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் அவர் வெற்றியாளர்தான்.

குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களின் புள்ளி விவரத்தை அறிந்து கொள்ள..

மேற்கண்டவர்கள் குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிர்ஷ்டசாலிகள் என்று பெயர் பெற்றவர்கள். இனி நாம் பார்க்கப் போவது அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தேர்தலில் சாதித்தவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். இவர்கள் ஒன்றல்ல, இரண்டல்ல லட்சக் கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, வெற்றிக் கனியை ருசித்தவர்கள்.

இந்தியாவில் நடந்த பொதுத் தேர்தல்களிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் யார் என்றால், 2004ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மேற்கு வங்க மாநிலம் அரம்பாக் தொகுதியில் போட்டியிட்ட அனில் பாசுதான். இவர் 5 லட்சத்து 92 ஆயிரத்து 502 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இவரைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு குஜராத் மாநிலம் வதோதராவில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நரேந்திர மோடி 5 லட்சத்து 70 ஆயிரத்து 128 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து 1989 ம் ஆண்டு பிகார் மாநிலம் ஹஜிபுர் தொகுதியில் போட்டியிட்ட ஜனதா தள வேட்பாளர் ராம் விலாஸ் பாஸ்வான் 5 லட்சத்து 4 ஆயிரத்து 448 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் 3ம் இடம் பிடித்துள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை 1996ம் ஆண்டு வடசென்னையில் திமுக சார்பில் போட்டியிட்ட என்விஎன் சோமு, 3 லட்சத்து 89 ஆயிரத்து 617 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே இதுவரை அதிகபட்ச வாக்கு வித்தியாசமாக உள்ளது.

இதில் மற்றொரு சுவாரஸ்யத் தகவல் என்னவென்றால்,  மக்களவைத் தேர்தலில் இரண்டு முறை சுயேச்சை வேட்பாளர்கள் அதிகபட்ச வாக்குகளுடன் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதே.

அதாவது 1967ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் சுயேச்சை  வேட்பாளர் கே. சிங் 1,93,816 வாக்குகள் வித்தியாசத்திலும், 1980ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் மகாராஜா மார்தாண்ட் சிங் 2,38,351 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

சாதனைக்கு மேல் சாதனை படைத்த ராம்விலாஸ் பாஸ்வான்
இந்திய வரலாற்றில் அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதே மிகப்பெரிய விஷயமாகக் கருதப்படுகிறது என்றால், ராம் விலாஸ் பாஸ்வான் இரண்டு முறை அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனைக்கு மேல் சாதனை படைத்துள்ளார்.

1977ம் ஆண்டு 4 லட்சத்து 24 ஆயிரத்து 545 வாக்கு வித்தியாசத்திலும், 1989ம் ஆண்டு பிகார் மாநிலம் ஹஜிபுர் தொகுதியில் போட்டியிட்ட ஜனதா தள வேட்பாளர் ராம் விலாஸ் பாஸ்வான் 5 லட்சத்து 4 ஆயிரத்து 448 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் 3ம் இடம் பிடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com