ms dhoni amrapali
ms dhoni amrapali

ரூ.40 கோடி இழுத்தடிப்பு: அமரபல்லி நிறுவனம் மீது உச்ச நீதிமன்றத்தில் தோனி வழக்கு

அமரபல்லி நிறுவனத்தின் மீது உச்ச நீதிமன்றத்தில் மகேந்திர சிங் தோனி புதன்கிழமை வழக்கு தொடர்ந்தார். 
Published on

ரூ.40 கோடி வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் விவகாரத்தில் அமரபல்லி நிறுவனத்தின் மீது உச்ச நீதிமன்றத்தில் மகேந்திர சிங் தோனி புதன்கிழமை வழக்கு தொடர்ந்தார்.

அமரபல்லி கட்டுமான நிறுவனத்தின் விளம்பரத்தூதராக முன்னாள் இந்திய கேப்டன் தோனி, கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், ஒப்பந்தத்தின் படி வழங்க வேண்டிய ரூ. 38.95 கோடியை வழங்காமல் அந்நிறுவனம் தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது.

அதில் ரூ. 22.53 கோடி அசல் தொகையும், ரூ. 16.42 கோடி வட்டியும் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இருதரப்புக்கும் இடையிலான ஒப்பந்த ஆவணமும் உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com