பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு கூலி வழங்குக: துறை அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் எம்.பி கடிதம் 

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக கூலி வழங்குக என்று மத்திய  தொலைத்தொடர்புத் துறை அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் எம்.பி ரங்கராஜன் கடிதம் எழுதியுள்ளார்.
பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு கூலி வழங்குக: துறை அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் எம்.பி கடிதம் 
Published on
Updated on
1 min read

சென்னை: பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக கூலி வழங்குக என்று மத்திய  தொலைத்தொடர்புத் துறை அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் எம்.பி ரங்கராஜன் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டார பிஎஸ்என்எல்-ல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கூலி வழங்காதது குறித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹாவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா எம்.பி டி.கே.ரங்கராஜன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டாரத்தில் அலுவலக பராமரிப்பு பணிகள் வாடிக்கையாளர் சேவையில் எழுத்தர் பணி, ஓட்டுநர்கள், நிலத்தடி தரைவழி தொலைபேசி  பராமரிப்பு, அகண்ட அலைவரிசை பராமரிப்பு, கோபுர பராமரிப்பு, கேபிள் பராமரிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் 6000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகிறார்கள் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் மூலம் இவர்கள் பணிபுரிகிறார்கள். இந்த அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் டெல்லியில் உள்ள பிஎஸ்என்எல் கார்ப்பரேட் அலுவலகத்தில் இருந்து தங்களுக்கு தேவையான நிதி கிடைத்த பிறகு  ஒப்பந்த ஊழியர்களுக்கான கூலியை தருகிறார்கள்.

டெல்லியில் உள்ள பிஎஸ்என்எல் கார்ப்பரேட் அலுவலகம் தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டாரத்திற்கு நிதி ஒதுக்காததால் தமிழ்நாடு வட்டாரத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கூலி தரப்படவில்லை என்ற விவரத்தை எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

டிசம்பர் 2018, ஜனவரி மற்றும் பிப்ரவரி 2019 ஆகிய மூன்று மாதங்களுக்கான கூலி இதுநாள் வரை பெரும்பான்மையான ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.

தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு, தமிழ்நாடு வட்டாரத்திற்கு சேர வேண்டிய தொகையினை விரைந்து அனுப்பி உதவிடவும், அதன் மூலம் இங்குள்ள ஒப்பந்த ஊழியர்கள் உரிய நேரத்தில் தங்கள் மாதாந்திர கூலியை பெற்று உற்சாகமாக பணிபுரிய செய்திடவும் வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com