'180 டிகிரி' பிரதமர் நரேந்திர மோடி: அகிலேஷ் யாதவ்

நரேந்திர மோடி ஒரு 180 டிகிரி பிரதமர் என்று உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். 
'180 டிகிரி' பிரதமர் நரேந்திர மோடி: அகிலேஷ் யாதவ்

நரேந்திர மோடி ஒரு 180 டிகிரி பிரதமர் என்று உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக வியாழக்கிழமை நடந்த பிரசாரத்தில் அவர் மேலும் கூறியதாவது:

நமது பிரதமர் மிகவும் நல்லவர், விளம்பரத்துறை அமைச்சருடன் சேர்ந்து அவரும் 180 டிகிரி பிரதமராக மாறிவிட்டார். தான் கூறும் அனைத்தையும் மறந்துவிடுவார். அளித்த வாக்குறுதிகளுக்கு நேரெதிராக மட்டுமே செயல்படுவார். கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறி பணமதிப்பிழப்பு போன்ற தலைகீழ் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். 

அந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நகஸ்ல் மற்றும் பயங்கரவாதம் அழியும் என்றார். ஆனால், அதன்பிறகு தான் அவை அதிகமானது. பிரதமர் மோடி எதை வேண்டுமானாலும் கூறுவார்.

பாஜக தான் வாரிசு அரசியலை ஊக்குவித்து வருகிறது. ஆட்சியமைத்தவுடன் 2 வாக்குறுதிகளை ஏற்படுத்திக்கொண்டனர். அதில் ஒன்று நாட்டுக்கானது மற்றொன்று ஆர்எஸ்எஸ்-கானது. எனவே எப்போது எதன் கீழ் செயல்பட வேண்டும் என்பதையும் மறந்துவிடுவார் என்று அகிலேஷ் யாதவ் விமர்சித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com