ஹிமாச்சலப் பிரதேசத்தில் காத்திருக்கும் 50 லட்சம் பேர்! நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு

7-ஆம் கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், ஹிமாச்சலப் பிரதேசத்தில் 50 லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் காத்திருக்கும் 50 லட்சம் பேர்! நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு

7-ஆம் கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், ஹிமாச்சலப் பிரதேசத்தில் 50 லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இவற்றில் 6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தற்போது 7-ஆவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு (மே 19) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், 7-ஆம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளதாக அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி டி.கே.ரத்தன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

மாநிலம் முழுவதும் 53 லட்சத்து 30 ஆயிரத்து 154 வாக்காளர்கள் உள்ளனர். 7,730 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 373 வாக்குப்பதிவு மையங்கள் மோசமானதாக கணக்கிடப்பட்டுள்ளது.

47 கம்பெனி பாதுகாப்புப் படையினர் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com