ஜாதி, மத, வாரிசு அரசியலில் ஓட்டை விழுந்துள்ளதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த யோகி ஆதித்யநாத் கூறுகையில்,
நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் உழைத்தால் மட்டுமே பொது வாழ்க்கையில் நீடித்திருக்க முடியும். இந்த மக்களவைத் தேர்தலில் கடந்த 5 ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசால் ஏற்படுத்தப்பட்ட நலத்திட்டங்களின் மத்தியில் நடைபெற்றது.
வாக்காளர்களின் உற்சாகம் நாட்டின் ஜனநாயகத்தின் முதர்ச்சியைக் காட்டுகிறது. இந்த தேர்தல் நடைபெற்ற விதம் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நாடு முழுவதும் ஜாதி, மத, வாரிசு அரசியலில் ஓட்டை விழுந்துள்ளது என்றார்.