
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ரிசார்ட் - 2பி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
இந்த 'ரிசார்ட் - 2பி' செயற்கைக்கோளானது 615 கிலோ எடை கொண்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வேளாண்மை, வனச் சூழல், பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்பட உள்ளது.
இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரிசாட் - 2பி செயற்கைக்கோளானது விண்ணில் 555 கிலோ மீட்டர் தொலைவில் புதன்கிழமை அதிகாலை நிலைநிறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.