குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வெற்றி 

குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வெற்றி 

காந்தி நகர்: குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா  நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில்  போட்டியிட்டார்.  

தற்போது நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான முன்னிலை நிலவரங்கள் மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  

இதில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் அறுதிப் பெரும்பான்மைக்கான 272 இடங்களுக்கு மேலாக முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக மோடி மீண்டும் இந்திய பிரதமராக வருவது உறுதியாகி விட்டது.

இந்நிலையில் குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சவ்டா சதுர்சின் சவன்ஜியை 4, 83,269 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com