மக்களைவை தேர்தல் முடிவுகளால் ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சிக்கு பாதிப்பு எதுவும் இல்லை என அக்கட்சியின் தலைவர் அஜித் சிங்கின் மகன் ஜெயந்த் சௌதரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோவில் தெரிவித்துள்ளதாவது: மக்களவைத் தேர்தலில் பாஜக மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கும், எம்.பி.க்களுக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகள். தேசத்தின் வளர்ச்சியை கட்டமைப்பதில் நாங்கள் எங்களது பங்களிப்பை தொடர்ந்து வழங்குவோம்.
இந்த தேர்தலில் வெற்றி பெற மகா கூட்டணி கடுமையாக பாடுபட்டது. அதற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியின் இளம் தொண்டர்களுக்கு நான் சொல்வதெல்லாம், எவர் ஒருவர் தோல்வியின் சுவையை உணரவில்லையோ அவர் உண்மையான வாழ்க்கையை வாழவில்லை என்பதே எனது கருத்தாகும். வாழ்வின் ஒவ்வொரு திருப்பு முனையும் சுய முன்னேற்றத்துக்கான வழியாகும்.
எனவே, மக்களவை தேர்தல் முடிவுகளால் கட்சிக்கு பாதிப்பு எதுவும் இல்லை. விவசாயிகளின் உரிமைக்காக ராஷ்டிரிய லோக் தளம் தொடர்ந்து உறுதியான குரல் கொடுக்கும் என்று அந்த விடியோவில் ஜெயந்த் சௌதரி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய் பிறந்த நாளுக்கு ஏன் வாழ்த்தவில்லை? ரஜினிகாந்த் பதில்!

கெட்டி மேளம் தொடரின் நிறைவு நாள் படப்பிடிப்பு படங்கள்! இணையத்தில் வைரல்!

புணே இளைஞர் கொலை! கொலையாளியைக் காட்டி கொடுத்த ஹூடி

முதல்வர் விஜய் சைகை: அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


