திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

ராமர் கோயில் கட்டுவதில் பாஜக எப்போதுமே உறுதியாகத்தான் இருந்துள்ளது: ஜே.பி. நட்டா

அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட பாஜக எப்போதுமே உறுதியாகத்தான் என பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா இன்று (சனிக்கிழமை) தெரிவித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :31 ஜனவரி 2024, 1:03 pm

DIN


அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட பாஜக எப்போதுமே உறுதிபூண்டுள்ளது என பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா இன்று (சனிக்கிழமை) தெரிவித்தார்.

பாபர் மசூதி நில வழக்கில், உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு வழங்கியதை வரவேற்ற பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் பாஜக எப்போதுமே உறுதியுடன்தான் இருந்துள்ளது என தெரிவித்தார். 

இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர், 

"நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் இருந்து, நாட்டின் சமூகம், கலாசாரத்தைக் காத்தமைக்கு பாஜக தலை வணங்குகிறது. நாம் ஒற்றுமையாக இருக்கிறோம், இந்திய ஜனநாயகத்தின் வேர் மிகவும் வலிமையாக இருக்கிறது என்பதை இந்த முடிவு தெளிவாக தெரிவிக்கிறது. 

பாலம்பூர் தீர்மானத்தில் இருந்து இன்றைய தேதி வரை, இந்த விவகாரத்தில் பாஜக நேர்மறையாகவே செயல்பட்டு, தனது பொறுப்புகள் அனைத்தையுமே செய்துள்ளது. ராமர் கோயில் விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தீர்வு கிடைத்திருப்பது எங்களுக்கு மிகவும் திருப்திகரமாக உள்ளது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.