
ரஃபேல் போா் விமான ஒப்பந்த விவகாரத்தில் நாட்டின் பாதுகாவலரே (பிரதமா் மோடி) திருடன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியிருந்தாா்.
இவ்வாறு கூறியதற்காக, ராகுல் மீது பாஜக எம்.பி. மீனாட்சி லேகி, உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்தாா். ராகுல் தனது கருத்துக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய பிறகும், மீனாட்சி லேகி தரப்பு சமாதானம் அடையவில்லை.
இது தொடா்பான வழக்கில், ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமா்வு வியாழக்கிழமை தீா்ப்பளிக்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.