கூகுளையே அசத்திய ஏழு வயதுச் சிறுமி!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஏழு வயது சிறுமியான திவ்யான்ஷி சிங்கல் வரைந்த படம்தான் இன்றைய டூடுலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
google doodle
google doodle
Published on
Updated on
1 min read

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஏழு வயது சிறுமியான திவ்யான்ஷி சிங்கல் வரைந்த படம்தான் இன்றைய டூடுலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக, கூகிள் குழந்தைகளிடமிருந்து ஓவியங்களை வரவேற்று வருகிறது. இந்த ஆண்டு தேர்வை பற்றி குறிப்பிடுகையில், 'ஒரு சிறந்த உலகத்திற்கான திறப்பை பல புதிய, ஆக்கபூர்வமான ஓவியங்கள் மூலம் காணக் கிடைப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும். அவ்வகையில், கடலை சுத்தம் செய்தல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனியாகப் பறத்தல், எல்லைகள் இல்லாத ஒரு உலகத்தைப் பற்றி கனவு காணுதல் போன்ற பலவிதமான ஓவியங்கள் வந்து கூகுளின் ஓவியப் போட்டிக்கு வந்து குவிந்தன.

இந்த ஆண்டு நாடு முழுவதும் 1 முதல் 10 வரையிலான வகுப்புகளில் இருந்து 1.1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளிடமிருந்து ஓவியங்கள் வந்து குவிந்தன. 'குழந்தைகளின் எதிர்காலம் இயற்கையோடு பயணப்பட வேண்டும் என்ற கருத்தை அழகான ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்தி இந்த ஆண்டு கூகுளின் தேர்வில் இடம்பிடித்தார் திவ்யான்ஷி. 

தனது ஓவியத்திற்கு 'தி வாக்கிங் ட்ரீ' என்று பெயர் வைத்திருந்தார் திவ்யான்ஷி. அது குறித்து விரிவாகக் கூறிய அவர், 'நான் வளரும் போது, ​​உலகின் மரங்கள் நடக்கவோ பறக்கவோ முடியும் என்று நம்புகிறேன். நிலத்துக்கு பாதிப்பில்லாமல் அதனை சுத்தப்படுத்த முடியும். மிகக் குறைந்த அளவே காடழிப்பு இருக்கும், மனிதர்கள் மரங்களிடம் அவற்றின் நண்பர்களிடமும் வேறு இடத்திற்கு போகும்படி சொல்லலாம்’ என்றார். ​தனது வீட்டைச் சுற்றி பல மரங்கள் வெட்டப்படுவதைக் கண்டபோது இந்த யோசனை தனக்கு வந்ததாக திவ்யான்ஷி கூறினார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 குழந்தைகள் தினமாக
கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com