18-ஆம் தேதி கூடுகிறது குளிர்காலக் கூட்டத்தொடர்: மசோதாக்கள் தயார்!

வரும் 18-ஆம் தேதி தொடங்கி, ஒரு மாத காலம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், 35-க்கும் மேற்பட்ட மசோதாக்களை எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.
18-ஆம் தேதி கூடுகிறது குளிர்காலக் கூட்டத்தொடர்: மசோதாக்கள் தயார்!


வரும் 18-ஆம் தேதி தொடங்கி, ஒரு மாத காலம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், 35-க்கும் மேற்பட்ட மசோதாக்களை எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 18-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தில் தற்போது 43 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.

இந்த கூட்டத்தொடரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தானில் இருந்து குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர் ஆகிய சிறுபான்மைச் சமூகத்தினர், இந்தியக் குடியுரிமை பெற வேண்டுமெனில் குறைந்தது 11 ஆண்டுகள் வரை இந்தியாவில் வசித்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருந்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று புதிய மசோதா பரிந்துரை செய்கிறது.

அண்டை நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மைச் சமூகத்துக்கு மட்டும் குடியுரிமை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த மசோதாவானது, பாஜகவின் முக்கியத் திட்டமாகும். இந்த மசோதாவுக்கு அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான எதிர்ப்புகள் உள்ளது. இது சட்டமாவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற வேண்டும்.

இதுதவிர தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டம், மூன்றாம் பாலினத்தவர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்துக்கு மாற்றாக இ-சிகரெட் தடைச் சட்டம், ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவிட சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com