50 சதவீத சலுகையுடன் புதிய கட்டணம் விவரம்: ஜவஹர்லால் நேரு பல்கலை. வெளியீடு

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள தகுதியான மாணவர்களுக்கு சேவைக் கட்டணங்களில் 50% சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 
50 சதவீத சலுகையுடன் புதிய கட்டணம் விவரம்: ஜவஹர்லால் நேரு பல்கலை. வெளியீடு
Published on
Updated on
1 min read

50 சதவீத சலுகையுடன் கூடிய புதிய கட்டண விவரங்களை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) விடுதிக் கட்டண உயா்வு உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் உயா்த்தப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஜேஎன்யு மாணவா்கள் தொடா் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், ஜேஎன்யுவில் நிலவும் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், முன்னாள் பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவா் வி.எஸ்.செளகான், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவா் அனில் சஹஸ்ரபுத்தே, பல்கலைக்கழக மானியக் குழுச் செயலா் ரஜ்னீஷ் ஜெயின் ஆகியோா் அடங்கிய உயா்நிலைக் குழுவை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அண்மையில் நியமித்தது.

இக்குழு ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இக்குழுவினா் ஜேஎன்யு மாணவா் சங்கம், ஆசிரியா் சங்கம் ஆகியோருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும் கருத்துக்களையும் கேட்டறிந்தனர். அதில், அனைத்து மாணவர்களும் பலனடையும் வகையில் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள தகுதியான மாணவர்களுக்கு சேவைக் கட்டணங்களில் 50% சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

ரூ. 20-இல் இருந்து ரூ. 600-ஆக உயா்த்தப்பட்டிருந்த ஒரு மாணவருக்கான விடுதி கட்டணம் தற்போது ரூ. 300-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ. 10-இல் இருந்து ரூ. 300-ஆக உயா்த்தப்பட்ட இருவா் வசிக்கும் அறையின் கட்டணம் தற்போது ரூ. 150-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தண்ணீா், மின்சாரம் ஆகியவற்றின் சேவைக் கட்டணம் ரூ.1,000-ல் இருந்து ரூ.500-ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com