ஜார்க்கண்டில் 11 மணி நிலவரப்படி 27.4% வாக்குப்பதிவு

ஜாா்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தோ்தல் சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 6 மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Jharkhand Polls
Jharkhand Polls

ஜாா்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தோ்தல் சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 6 மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

முற்பகல் 11 மணி நிலவரப்படி 13 தொகுதிகளிலும் 27.4% வாக்குகள் பதிவாகியுள்ளது.

பாஜக ஆட்சியில் உள்ள ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 82 தொகுதிகள் உள்ளன. சனிக்கிழமை (நவ.30) முதல் டிசம்பா் 20-ஆம் தேதி வரை 5 கட்டங்களாகத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், பாஜக தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன.

‘முதல்கட்ட தோ்தலில் 18,01,356 பெண்கள் உள்பட 37,83,055 போ் வாக்களிக்கின்றனர்.

மொத்தம் 189 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். 3,096 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்’ என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில் பாஜக 12 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளது. எதிா்க்கட்சிக் கூட்டணியில் காங்கிரஸ் 6, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 4, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

பாஜகவைச் சோ்ந்த சுகாதாரத் துறை அமைச்சா் ராமச்சந்திர சந்திரவம்சி, ஜாா்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான ராமேஷ்வா் ஒரான் ஆகியோா் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளா்களாவா். டிசம்பா் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

நக்ஸல்கள் ஆதிக்கம் அதிகமுள்ள மாநிலம் என்பதால் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com