தில்லியில் அக்.31 அன்று அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை! ஏன் தெரியுமா?

‘ரன் ஃபார் யூனிட்டி’ மராத்தான் நிகழ்வுக்காக டெல்லி மெட்ரோ ரயில் சேவை அக்டோபர் 31 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
தில்லியில் அக்.31 அன்று அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை! ஏன் தெரியுமா?
Updated on
1 min read

‘ரன் ஃபார் யூனிட்டி’ மராத்தான் நிகழ்வுக்காக டெல்லி மெட்ரோ ரயில் சேவை அக்டோபர் 31 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்ததினமான  அக்டோபர் 31 ஆம் தேதி தலைநகர் தில்லியில் 'ஒற்றுமைக்கான ஓட்டம்' (Run for Unity) என்ற நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த மாரத்தான் நிகழ்வில் பங்கேற்க  வசதியாக அதிகாலை முதலே மெட்ரோ சேவைகளை தொடங்க தில்லி முதல்வர் கோரிக்கை விடுத்தார். அதன்படி, அன்றைய தினம் தில்லியின் அனைத்து முனைய நிலையங்களிலிருந்தும்  அதிகாலை 4 மணிக்கு மெட்ரோ சேவைகள் தொடங்கும் என்றும் அதிகாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்ற கணக்கில் சேவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு பின்னர் வழக்கம்போல மெட்ரோ ரயில் சேவைகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த மராத்தான் நிகழ்வில் 3,000 பள்ளிக் குழந்தைகள் மற்றும் 300 ஓய்வுபெற்ற ராணுவத்தினர் மற்றும் உள்பட12,000 பேர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com