
ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி எனுமிடத்தில் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருக்கும் போதே அப்பகுதியில் பாதாளச் சாக்கடை மீது அமைக்கப்பட்டிருந்த நடைபாதை சரிந்து விழுந்த விபத்துக்குள்ளான அதிர்ச்சிக்குரிய சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது.
இதில் அங்கிருந்த மற்றொருவரும் நிலை தவறி பள்ளத்தில் விழுந்தார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக விரைந்து வந்து பள்ளத்தில் விழுந்தவர்களை மீட்டனர். இதில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் ஒரு இரு சக்கர வாகனமும் அந்த பள்ளத்தில் சரிந்து விழுந்தது.
திடுக்கிட வைக்கும் இந்த விடியோப் பதிவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டு, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.