உங்களது பத்து கோடியை உடனடியாக திருப்பி அளிக்க இயலாது: கார்த்தி சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் செக்! 

கார்த்தி சிதம்பரத்தால் உச்ச நீதிமன்றத்தால் டெபாசிட் செய்யப்பட்ட ரூ. பத்து கோடியை உடனடியாக திருப்பி அளிக்க இயலாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

புது தில்லி: கார்த்தி சிதம்பரத்தால் உச்ச நீதிமன்றத்தால் டெபாசிட் செய்யப்பட்ட ரூ. பத்து கோடியை உடனடியாக திருப்பி அளிக்க இயலாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் பணமோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.  அத்துடன் நீதிமன்ற விசாரணையின் போது, கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்குச் செல்லவும் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் தனது மகளின் கல்வி தொடர்பான பணிகள் மற்றும் தொழில் தொடர்பான பணிகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வேண்டும் என்று நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம்  கோரிக்கை வைத்தார்.

அதற்கு கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தில் ரூ. 10 கோடியை டெபாசிட் செய்து விட்டு வெளிநாடு செல்லலாம் என்று நீதிமன்றம் அனுமதியளித்தது. அவ்வாறே அவர் செய்த பின்னர் இவ்வாண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தால் உச்ச நீதிமன்றத்தால் டெபாசிட் செய்யப்பட்ட ரூ. பத்து கோடியை உடனடியாக திருப்பி அளிக்க இயலாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இம்மனுவானது நீதிபதி தீபக் குப்தா முன்னிலையில் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கார்த்தி சிதம்பரத்தால் உச்ச நீதிமன்றத்தால் டெபாசிட் செய்யப்பட்ட ரூ. பத்து கோடியை இன்னும் மூன்று மாதங்களுக்கு திருப்பி அளிக்க இயலாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com