கருப்புப் பணம் தொடர்பான விவரங்களை பகிர்வதன் மூலம் பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட முடியும்: ராம்நாத் கோவிந்த்

கருப்புப் பணம் தொடர்பான விவரங்களை இந்தியாவுடன் பகிர்வதன் மூலம் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடலாம் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
ஸ்விட்சர்லாந்தின் பெர்ன் நகரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அளிக்கப்பட்ட ராணுவ மரியாதை.

ஸ்விட்சர்லாந்துக்கு மூன்று நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள ராம்நாத் கோவிந்த்,  அந்நாட்டின் 7 உறுப்பினர்கள் அடங்கிய பெடரல் கவுன்சில் முன்பு, வெள்ளிக்கிழமை பேசியதாவது: அடுத்த சில வாரங்களில் கருப்புப் பணம் தொடர்பான விவரங்களை ஸ்விட்சர்லாந்து அரசு இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வரி ஏய்ப்பும், கருப்புப் பண பரிவர்த்தனையும் பயங்கரவாதத்துடன் நெருங்கிய தொடர்புடையவை. பயங்கரவாதம் என்பது சர்வதேச அளவில் எதிர்கொள்ளப்பட்டுவரும் மிகக் கடுமையான சவாலாகும்.
இந்தியாவும் பல ஆண்டுகளாக பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகிறது. அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் வீழ்த்துவதற்கு ஸ்விஸ் அரசின் ஆதரவு தேவை என்றார் ராம்நாத் கோவிந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com