கோப்புப் படம்
கோப்புப் படம்

ரூ.2,000 கோடிக்கு ராணுவத் தளவாடங்கள்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

ராணுவத்துக்கு ரூ. 2,000 கோடியில் தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
Published on


ராணுவத்துக்கு ரூ. 2,000 கோடியில் தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பான முடிவுகளை பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ராணுவத் தளவாட கொள்முதல் கவுன்சில் எடுத்து வருகிறது. 

இந்தக் கவுன்சிலின் கூட்டம், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், ராணுவத்துக்கு சுமார் ரூ. 2,000 கோடி மதிப்பில் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ராணுவத்தில் பயன்படுத்தப்படும் டி72, டி90 ஆகிய பீரங்கிகளை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர, நிலத்தில் கண்ணிவெடிகளை பதிக்கும் இயந்திரங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பிடம் (டிஆர்டிஓ) இருந்து கொள்முதல் செய்வதற்கும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com