
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சாதனைகள் குறித்த கண்காட்சி பாஜக அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதனை தொடங்கி வைத்தார்.
வருகிற 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார். இதனை முன்னிட்டு, பாஜக சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரமதர் நீண்ட காலம் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக, நாடு முழுவதும் செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு சேவை வாரம் என கொண்டாட பாஜக முடிவு செய்துள்ளது.
இந்த வாரத்தில் மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்வதில் கட்சி தொண்டர்கள் ஈடுபடவுள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொது மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை தீர்த்து வைக்கும் முயற்சியில் பாஜக தொண்டர்கள் ஈடுபட பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக டெல்லி பாஜக அலுவலகத்தில் பிரதமர் மோடியின் சாதனைகள் குறித்த கண்காட்சி துவங்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த கண்காட்சியை நேற்று தொடங்கி வைத்தார். உடன் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றுள்ளதை அடுத்து, கடந்த ஆட்சிக்காலத்தில் அவர் செய்த சாதனைகள், சமீபத்தில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்டவை சாதனைகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இந்த கண்காட்சியை பார்வையிடலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.