அன்புள்ள அப்பா.. 74வது பிறந்தநாளில் சிதம்பரத்துக்கு மகன் கார்த்தி எழுதிய கடிதம்!

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் 74வது பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு, அன்புள்ள அப்பா என்று குறிப்பிட்டு சிதம்பரத்தின் மகன் கார்த்தி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அன்புள்ள அப்பா.. 74வது பிறந்தநாளில் சிதம்பரத்துக்கு மகன் கார்த்தி எழுதிய கடிதம்!
Published on
Updated on
1 min read


புது தில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் 74வது பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு, அன்புள்ள அப்பா என்று குறிப்பிட்டு சிதம்பரத்தின் மகன் கார்த்தி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்.

சிதம்பரம் திகார் சிறையில் இருக்கும் நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு கார்த்தி வெளியிட்டிருக்கும் இரண்டு பக்கக் கடிதத்தில், உங்களுக்கு 74 வயது ஆகிறது, ஆனால் உங்களை 56 வயதால் தடுத்து நிறுத்த முடியாது. நீங்கள் எப்போதுமே பிறந்தநாளை மிகப்பெரிய கொண்டாட்டமாக நடத்தியதில்லை. ஆனால் நாட்டில் தற்போது நிலைமை அப்படியில்லை, சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட பெரிய பெரிய கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்த நாளில் நீங்கள் எங்களுடன் இல்லை. நீங்கள் எங்களுடன் இல்லாதது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. எப்போது நீங்கள் வீடு திரும்புகிறீர்களோ அன்றைய தினம் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடலாம்.

உங்களுக்கு எதிரான சதி நாடகத்தில் போராடி உண்மையின் துணையுடன் வெளி வருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், அந்த கடிதத்தில், இங்கிலாந்து நாடாளுமன்ற நிகழ்வுகள், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் கோப்பையை வென்று சாதனை படைத்தது, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி 5% ஆக சரிந்ததை, 100 நாள் நிறைவு செய்ததன் வெற்றியாக பாஜக கொண்டாடுவது, சந்திரயான்-2 விண்கலம் திட்டம் தோல்வி அடைந்த போது, இஸ்ரோ தலைவர் சிவனை கட்டி அணைத்து பிரதமர் மோடி ஆறுதல் சொன்னது நாடகம் என்றும், பியூஷ் கோயல் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தவர் யார் என்பதில் நியூட்டனுக்கு மாறாக ஐன்ஸ்டீனைக் குறிப்பிட்ட நிகழ்வு என பல்வேறு செய்திகளை கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com